மேலும் அறிய

TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?

TNGASA Registration 2025: விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.

இவற்றில் சேர மே 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் கடைசித் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

விண்ணப்பிப்பது எப்படி?

 

கலை மற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில்‌ பெறலாம்‌.

குறிப்பாக, https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல், பிறந்த தேதி, தகுதித் தேர்வு ஆகியவற்றின் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

 

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

கூடுதல் விவரங்களுக்கு:

தொடர்பு எண்கள்‌: 044 - 24343106, 044 - 24342911

இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com

 

வகுப்புகள் தொடங்குவது எப்போது?

மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget