தக் லைஃப் படத்திற்கு தக் கொடுக்கும் சூரியின் மாமன்...கிராமப்புறங்களில் இன்னும் குறையாத வசூல்
கமலின் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சூரியின் மாமன் திரைப்படத்திற்கு மக்களிடம் இன்னும் வரவேற்பு இருந்து வருகிறது

கிராமங்களில் கலக்கும் சூரியின் மாமன்
நாயகனாக சூரி களமிறங்கியதில் இருந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். கருடன் படத்தைத் தொடர்ந்து சூரி நடித்து சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படம் குடும்ப ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி ,ராஜ்கிரண், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், மாஸ்டர். பிரகீத் சிவன், பால சரவணன், ஜெய பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மெல்வின், திருச்சி அனந்தி, சாவித்திரி, சாரதா, தமிழ் செல்வி, ரயில் ரவி, உமேஷ் காந்த் ஆகிய பலர் நடித்துள்ள படம் மாமன். கடந்த மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன் திரைப்படம் நகரப்பற மக்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
மாமன் பட வசூல்
மாமன் திரைப்படம் இதுவரை ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரி நடித்து 40 கோடி வசூலை கடக்கும் நான்காவது திரைப்படம் மாமன் என்பது குறிப்பிடத் தக்கது.
தக் லைஃப் படத்திற்கு சவால் விடும் சூரியின் மாமன்
வரும் ஜூன் 5 ஆம் தேதி கமலின் தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பெரு நகரங்களில் தக் லைஃப் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்து வரும் நிலையில் கிராமப்புறங்களில் பல திரையரங்குகளில் இன்னும் மாமன் படம் நீக்கப்படவில்லை. படத்திற்கு மக்களிடம் தொடர்ச்சியான வரவேற்பு இருந்து வருவதே இதற்கு காரணம். தக் லைஃப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நகைச்சுவை நடிகராக தொடங்கிய சூரி தற்போது முன்னணி நடிகர்களின் படத்திற்கே சவால் விடும் நாயகனாக கமர்சியல் வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் .
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , நாசர் , அசோக் செல்வன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.





















