Pandian Stores 2: வலியால் துடித்த குமரவேல்... அதிர்ச்சியில் உறைந்த மீனா - ராஜு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 496ஆவது எபிசோடில், அரசியிடமிருந்து எல்லா உண்மைகளையும் ராஜீயும், மீனாவும் தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அரசி மற்றும் குமாரவேல் திருமணத்தைத் தொடர்ந்து பாண்டியனின் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருக்கின்றனர். ஆனால், குமாரவேலுவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதற்கு காரணம், பாண்டியனின் குடும்பத்தை பழி வாங்கியதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டிய அரசியை அடிக்க வேண்டும் அதனால், அவர்கள் குடும்பத்தினர் துடிக்க வேண்டும் என்று கருதிய குமாரவேல், அவரை கன்னத்தில் அறைய முயன்று தனது கையை சுவற்றில் குத்தி காயம் ஏற்படுத்திக் கொண்டார். இதனால், அவர் வலியால் துடிக்கவே காந்திமதியும், குமாரவேலுவின் அம்மாவும் ஓடோடி வந்து என்ன நடந்து என்று கேட்க, அதற்கு அரசி அவர் கீழே விழுந்துவிட்டார். அதனால், அவரத் கையில் காயம் ஏற்பட்டது என நக்கலாக கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து பழனிவேல் அரசியிடம் வந்து மீனா உன்னை சந்தித்து பேச வேண்டும் என்று கூறுகிறாள். அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு வர சொன்னதாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். அதன் பிறகு கோயிலுக்கு சென்ற அரசியிடம் மீனாவும், ராஜியும் என்ன நடந்தது என்பது குறித்து... துருவி துருவி கேள்வி கேட்கிறார்கள். முதலில் மீனாவின் கேள்விக்கு அரசி உண்மையை சொல்லவில்லை என்றாலும் அதன் பிறகு மீனா வற்புறுத்தி கேட்கவே நடந்த எல்லா உண்மைகளையும் ஒவ்வொன்றாக கூறுகிறார்.
தனது போட்டோவை வைத்து மிரட்டி, அதை வெளியிட்டு விடுவேன் என கூறி தன்னிடம் பேச வேண்டும் என்று குமரவேல் கட்டாயப்படுத்தினார். நானும் போனேன், ஆனால், அவர் என்னை கடத்தி சென்றுவிட்டார். மேலும், கல்யாணத்தை நிறுத்தவும், குடும்பத்தை பழி வாங்கவும் திட்டமிட்டார். நான் உண்மையை சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க. அதனால், எனக்கு வழி தெரியவில்லை. நான் எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டேன் என்றார். இதைக் கேட்டு மீனாவும், ராஜீயும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதற்கிடையில் இந்த எல்லா சம்பவத்திற்கு பின் இருப்பது சுகன்யா தான் என்று அரசி தெரியப்படுத்தினார். ஏற்கனவே அவர் தான் உன்னை இந்த சிக்கலில் சிக்க வைத்தார். இப்போதும் அவர் பேசுவதை கேட்டு நீ இப்படி செய்திருக்கிறாய் என்று மீனா அவரை திட்டினார். இதையடுத்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ அங்கு வருவது போன்று தெரிகிறது. ஆனால், அது யார் என்பது குறித்து தெரியவில்லை. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 496ஆவது எபிசோடு முடிவடைகிறது. இப்போது மீனாவிற்கும், ராஜீயும் உண்மை தெரிந்துவிட்டது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















