IPL 2025: ஹிட் மேன் செய்ததை மீண்டும் செய்வாரா ஸ்ரேயாஸ்.. வரலாற்றை மாற்றுமா பஞ்சாப் கிங்ஸ்..
இன்று அகமதாபாத்தில் நடைப்பெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரின் வ்ரலாற்றில் இது வரையில் குவாலிஃபையர் 1 போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வென்ற அணி எது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஐபிஎல் 2025:
18வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிநாளை எட்டியுள்ள நிலையில் இன்று அகமதாபாத்தில் நடைப்பெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இரு அணிகளும் இதுவரை கோப்பையை வெல்லாத நிலையில் புதிய சாம்பியன் அணி உருவாகும்.
குவாலிஃபையர் வரலாறு:
2011 ஆம் ஆண்டு முதல் நடந்து பிளே ஆஃப் போட்டிகளில் குவாலிஃபையர் 1-ல் வெற்றிப்பெற்ற அணியே அதிக முறை கோப்பையை தட்டிச்சென்றுள்ளன. ஆனால் 2013 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் குவாலிஃபையர் 1-ல் தோல்வி அடைந்த அணி வெற்றிப்பெற்றுள்ளது.
2013 ஆம் ஆண்டு குவாலிபயர் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது. பின்னர் இறுதி போட்டியில் உண்மையை சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை முதல்முறையாக தட்டிச் சென்றிருந்தது இதற்கு அடுத்தபடியாக 2017 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் ரைசிங் புனே சூப்பர் செயின்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி இதேபோல குவாலிஃபயர் ஒன்று போட்டியில் தோல்வியடைந்து இருந்தது ஆனால் இறுதி போட்டியில் மும்பை அணி துணை அணியில் வீழ்த்தி கோப்பையை மூன்றாவது முறையாக தட்டிச் சென்று இருந்தது. அதே போல் ஸ்ரேயாஸ் ஐயரும் பெங்களூரிடம் குவாலிஃபயர் ஒன்றில் தோல்வி அடைந்து இருந்தாலும் இறுதி போட்டியில் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது வரை ஐபிஎல் இறுதிப்போட்டிகள்:
- 2008- சென்னையை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான்
- 2009 - பெங்களூருவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸ்
- 2010 - மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2011 - பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2012 - சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா
- 2013 - சென்னையை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2014 - பஞ்சாபை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா
- 2015 - சென்னையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2016 - பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத்
- 2017 - புனேவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2018 - ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2019 - சென்னையை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2020 - டெல்லியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2021 - கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2022 - ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்
- 2023 - குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2024 - ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா




















