Karthigai Deepam: வழுக்கி விழுந்த சந்திரகலா.. கலசத்துடன் மாஸாக வந்த பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் தவிடுபொடியாக்கிய நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் தவிடுபொடியாக்கி நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வழுக்கி விழுந்த சந்திரகலா:
அதாவது, சிவனாண்டி விருமனுக்கு போன் போட்டு கார்த்திக் கலச பூஜைக்கு வந்தால் தகவல் கொடுக்க சொல்லி சொல்கிறான். இதைத்தொடர்ந்து இங்கே மண்டபத்தில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்கு கிளம்பி வருகிறாள்.
இந்த விஷயம் கார்த்திக்கு தெரிய வர பாட்டி வரும் சமயத்தில் சந்திரகலா இங்கு இருக்கக் கூடாது என திட்டமிட்டு வாழைப்பழம் தோலை கீழே போட்டு அவளை வழுக்கி விழ வைக்கின்றனர். பிறகு மயில்வாகனம் சந்திரகலாவை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று எக்ஸ்-ரே, ஸ்கேனிங் என எல்லாவற்றையும் எடுக்க வைத்து நேரத்தை தாமதப்படுத்துகிறான்.
கலசத்துடன் பரமேஸ்வரி பாட்டி:
இங்கே மண்டபத்தில் இளையராஜாவும் இங்கும் அங்குமாக நடந்தபடி இருக்க பரமேஸ்வரி பாட்டி கலசத்துடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















