Chennai News | ”அதிகாரி மாமூல் கேட்கல என்னை மன்னிச்சிடுங்க!” வியாபாரி அந்தர் பல்டி!
”அதிகாரி மாமூல் கேட்கல என்னை மன்னிச்சிடுங்க!” வியாபாரி அந்தர் பல்டி!
”அதிகாரி மாமூல் கேட்கல என்னை மன்னிச்சிடுங்க!” வியாபாரி அந்தர் பல்டி!
நகராட்சி ஊழியர்கள் மாமுல் கேட்டதாக, இளநீர் வியாபாரி வீடியோ வெளியிட்ட நிலையில், தெரியாமல் பேசியதாகவும் அவர்கள் மாமூல் கேக்கவில்லை எனவும் பேசி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினம்தோறும் நகராட்சிக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இந்த 2000 அபராதத்தை நாளைக்குள் செலுத்தவில்லை என்றால் சாலையில் இனிமேல் நீ கடை போட முடியாது என்று ஒருமையில் பேசி மிரட்டியதாக தினம்தோறும் நகராட்சிக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இந்த 2000 அபராதத்தை நாளைக்குள் செலுத்தவில்லை என்றால் சாலையில் இனிமேல் நீ கடை போட முடியாது என்று ஒருமையில் பேசி மிரட்டியதாகவும்,150 ரூபாய் மாமுல் கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என மேற்பார்வையாளர் ஐயப்பன் கூறியதாகவும் இளநீர் வியாபாரி ஆனந்தன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தக் காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வந்தது.
இந்தநிலையில் இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வியாபாரி அவ்வப்பொழுது சென்னை திருச்சி பேசிய நெடுஞ்சாலையில் தேங்காய் ஓடு குப்பைகளை எரித்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்துள்ளனர். இதுவரை நான்கு முறை சம்மந்தப்பட்ட வியாபாரிக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம்.
மீண்டும் அதே தவறை செய்ததால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசித்தும் வழங்கப்பட்டது. இது போன்ற நபர்களை ஊக்குவிக்க கூடாது என தெரிவித்தனர். தினமும் 50 ரூபாய் மட்டுமே நகராட்சி சார்பில் பெறப்படுகிறது. அதுவும் குப்பைகளை அகற்றுவதற்காக பெறப்படும் ரூபாய் என தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் வியாபாரி வெளியிட்டுள்ள வீடியோவில், அவரது மனைவியும் வியாபாரி ஆனந்த் ஆகியோர் பேசியிருப்பதாவது : நாங்கள் தெரியாமல் அப்படி பேசி விட்டோம், என அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.