Kodaikanal Must Visit Places: கொடைக்கானல் போறீங்களா.. இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.!
Kodaikanal Must Visit Places: கொடைக்கானலில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Kodaikanal must visit place in Summer: மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. கொடைக்கானலில் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பூம்பாறை கிராம - Poombarai Village
கொடைக்கானல் பூம்பாறை, இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஜீப் உதவியுடனே செல்ல முடியும். இங்கு உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. பூம்பாறையில் பூண்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மேகங்கள் தொட்டுச் செல்லும் காட்சிகளை ரம்யமாக பூம்பாறையிலிருந்து பார்க்க முடியும். இரண்டு நாட்கள் தங்க வேண்டும் என விரும்புபவர்கள் இங்கு சென்று வரலாம்.
டெவில் கிச்சன் - Devil's kitchen
'குணா குகை' என்று அழைக்கக்கூடிய டெவில் கிச்சன் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடமாக உள்ளது. தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. சிறிது தூரம் நடந்து சென்று அந்த இடத்தை அடையும் பொழுது, ட்ரக்கிங் சென்ற அனுபவம் நமக்கு கிடைக்கும். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாகவும் இந்த இடம் உள்ளது.
பெரிஜம் ஏரி - Berijam Lake
கொடைக்கானலில் உள்ள மிகவும் பெரிய ஏரிகளில் ஒன்றாக பெரிஜம் ஏரி உள்ளது. பைன் சூழப்பட்ட ஏரி பார்ப்பதற்கு ரம்மி அழகுடன் காணப்படும். கொடைக்கானலில் தவறவிட கூடாத இடங்களில் இதுவும் ஒன்று. இயற்கை ஆர்வலர்களுக்கும் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் இந்த ஏரி சிறந்த ஒன்றாக இருக்கும்.
டால்பின் நோஸ் - Dolphin’s Nose
கொடைக்கானலில் அட்வென்சர் விரும்புபவர்களுக்கு மிக ஏற்ற இடமாக டால்பின் நோஸ் இருக்கிறது. இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடும் முரடான பாதையில் மலையேறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் அந்த இடத்திற்கு செல்ல முடியாது. அட்வென்சர் பயணம் விரும்புவார்கள் நிச்சயம் இந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.
ராக் பில்லர் - Kodaikanal Rock Pillar
கொடைக்கானலில் பிரமிப்பை உண்டாக்கக்கூடிய இடங்களில் ராக் பில்லரும் ஒன்று. இந்த பாறை பார்ப்பதற்கு இரண்டு தூண்களைப் போல் மலையின் முடிவு பகுதிகளில் அமைந்திருப்பது மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். இதை அருகில் நின்று பார்ப்பதற்கும் வசதிகள் உள்ளன. இதன் அருகே பூங்கா ஒன்று உள்ளது.
கொடைக்கானல் படகு சவாரி Kodaikanal boat house
கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. குடும்பத்துடன் செல்வதற்கு மிக ஏற்ற இடமாக உள்ளது. சைக்கிளிங் படகுகளுடன் செல்வதற்கும் வசதிகள் உள்ளன.

