French Open 2023: பிரெஞ்சு ஓபனில் மூன்றாவது முறை.. உலகளவில் 23 வது முறை.. வரலாறு சாதனை படைத்த ஜோகோவிச்..!
நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதன் அடிப்படையில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

நேற்று நடந்த பிரெஞ்சு ஓபன் 2023 இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதன் மூலம் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். பாரீஸில் உள்ள கோர்ட் பிலிப் சாட்ரியரில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் 36 வயதான ஜோகோவிச், காஸ்பர் ரூட்டை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். இது ஜோகோவிச்சுக்கு மூன்றாவது பிரெஞ்சு ஓபன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நோவக் ஜோகோவிச் வென்ற 23வது கிராண்ட்ஸ்லாம்ன் பட்டம் இதுவாகும். நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதன் அடிப்படையில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை பின்னுக்கு தள்ளியுள்ளார். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபனில் நோவக் ஜோகோவிச்:
நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற நோவக் ஜோகோவிச், கடந்த 2012, 2014 மற்றும் 2015 இல் தனது முதல் மூன்று இறுதிப் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்தார். இறுதியாக தனது தோல்வியை தோற்கடித்து கடந்த 2016ம் ஆண்டு முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து, 2020 ம் ஆண்டு இரண்டாம் இடத்தையும், 2021ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.
இதையடுத்து மூன்று பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச், மேட்ஸ் விலண்டர், இவான் லெண்டல், குஸ்டாவோ குர்டன் ஆகியோரை சமன் செய்துள்ளார். நோவக் ஜோகோவிச் இதுவரை 34 ஆண்கள் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் விளையாடி, அதில் 23 பட்டங்களை வென்றுள்ளார்.
🇷🇸 HISTORY 🇷🇸#RolandGarros pic.twitter.com/5d4r8keSE6
— Roland-Garros (@rolandgarros) June 11, 2023
ஜோகோவிச் சாதனைகள்:
மூன்று பிரெஞ்சு ஓபன் பட்டங்களை தவிர, ஜோகோவிச் 6 முறை விம்பிள்டனையும், 4 முறை யுஎஸ் ஓபனையும், 10 முறை ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி அதில் 16 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். மேலும், 90-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே கிராண்ட்ஸ்லாம் வெற்றி இதுதான். அதேபோல், ஆஸ்திரேலிய ஓபனில் அவரது சாதனை 89 வெற்றி 8 தோல்விகள், விம்பிள்டனில் 86 வெற்றி10 தோல்விகள் மற்றும் யுஎஸ் ஓபனில் 81 வெற்றி 13 தோல்விகள் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதிக பட்டங்களை என்ற வீரர்கள் பட்டியல்:
நோவக் ஜோகோவிச் - 23
ஆஸ்திரேலிய ஓபன்: 7 (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023), பிரெஞ்ச் ஓபன்: 3 (2016, 2021, 2023), விம்பிள்டன்: 201, 401, 201, 501, 6 2019, 2021, 2022), யுஎஸ் ஓபன்: 3 (2011, 2015, 2018)
ரஃபேல் நடால் - 22
ஆஸ்திரேலிய ஓபன்: 2 (2009, 2022), பிரெஞ்ச் ஓபன்: 12 (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 202019, 2020, 2020, 2020, லெட் 2010), யுஎஸ் ஓபன்: 4 (2010, 2013, 2017, 2019)
ரோஜர் பெடரர் - 20
ஆஸ்திரேலிய ஓபன்: 6 (2004, 2006, 2007, 2010, 2017, 2018), பிரெஞ்ச் ஓபன்: 1 (2009), விம்பிள்டன்: 8 (2003, 2004, 2005, 2006, 2007, 20109, 20109, 20109). யுஎஸ் ஓபன்: 5 (2004, 2005, 2006, 2007, 2008)
பீட் சாம்ப்ராஸ் -14
ஆஸ்திரேலிய ஓபன்: 2 (1994, 1997), பிரெஞ்ச் ஓபன்: 0, விம்பிள்டன்: 7 (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000), யுஎஸ் ஓபன்: 5 (1990, 1993, 1995, 1996, 2002)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

