TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு பிறந்தது முதலே தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்னும் மார்ச் மாதமே பிறக்காத நிலையில், வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் வரும் மார்ச் 1ம் தேதி வர கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.
பிப்ரவரி 27:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
பிப்ரவரி 28:
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
மார்ச் 1:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம்
இந்த தேதிகளில் மேலே கூறிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு கோடை மாதத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்நிலைகள் கண்காணிப்பு
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமைழ, தென்கிழக்குப் பருவமழை பரவலாக பெய்த காரணத்தால் இந்த கோடையில் தண்ணீர் போதியளவு இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

