CSK New Captain: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம்..!
CSK New Captain: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்(IPL) தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாக்கு கிடைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் எம். எஸ் தோனி கேப்டனாக இதுவரை :
போட்டிகள் – 204
வெற்றி - 121
இழந்தது – 82
ஓய்வு இல்லை - 1
வெற்றி சதவீதம் - 59.60
4 முறை ஐபிஎல், 2 முறை CLT20 வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்குகிறது.
சென்னை அணி போட்டி விவரம் :
Start the Summer Whistles... #EverywhereWeGo! 🥳#TataIPL #WhistlePodu 🦁💛 pic.twitter.com/YGrRPIQysy
— Chennai Super Kings (@ChennaiIPL) March 6, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்