Viral Video: கண்ணீர் மல்க விடைபெற்ற இந்திய கேப்டன் சுனில் சேத்ரி - பிரியாவிடைகொடுத்த ரசிகர்கள் - வீடியோ
Sunil Chetri: இந்திய கால்பந்தாட்ட அணி கேப்டன் சுனில் சேத்ரி கண்ணீர் மல்க, ஓய்வுபெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sunil Chetri: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கால்பந்தாட்ட அணி கேப்டன் சுனில் சேத்ரியின், ரசிகர்களுக்கான கடிதம் மனதை உருக்கியுள்ளது.
சுனில் சேத்ரி ஓய்வு:
ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள விவேகானந்த யுபா பாரதி மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் மோதின. 19 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் கேப்டன் சுனில் சேத்ரிக்கு இது கடைசி போட்டியாகும். ஆனாலும் இந்த போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது, சுனில் சேத்ரியின் ரசிகர்களிடயே சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் ஏற்கனவே அறிவித்தது போல, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார்.
வழியனுப்பி வைத்த ரசிகர்கள்:
சல்ட் லேக் மைதானத்தில் கூடியிருந்த 58 ஆயிரம் ரசிகர்களின் உற்சாகம் மிகுந்த. கரகோஷங்களுடன், சுனில் சேத்ரி வழியனுப்பி வைக்கப்பட்டார். அதோடு, இரு அணி வீரர்களும் சேர்ந்து நின்று கார்ட் ஆஃப் ஹானர் என்ற மரியாதையை செலுத்த, கண்ணீர் மல்க ரசிகர்களை நோக்கி கையசத்தபடி, சுனிலெ சேத்ரி மைதானத்தை விட்டு வெளியேறினார். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள இந்திய கால்பந்தாட்ட அணி, எப்போதுமே லெஜண்ட் என சுனில் சேத்ரியை குறிப்பிட்டுள்ளது.
Forever Legend, @chetrisunil11 💙♾️#INDKUW #ThankYouSC11 #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/Gqb70eqbMg
— Indian Football Team (@IndianFootball) June 6, 2024
சுனில் சேத்ரியின் உருக்கமான கடிதம்:
ஊடக நண்பர்களுக்காக சுனில் சேத்ரி வெளியிட்ட கடிதத்தில், “கடந்த 19 வருடங்களில், உங்களில் பலருடன், ஒரு சில சந்தர்ப்பங்களில் தொடர்புகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் விரும்பியதை விட குறைவாகவே சொல்ல வேண்டிய நேரங்கள் இருந்தன. சில நேரங்களில் நான் சொன்ன சில பதில்கள் உங்களை கோப்படுத்தி இருக்கலாம் . ஆனால் அவை திட்டமிடப்பட்டவை கிடையாது. இந்தக் கடிதம் மற்றும் இந்த சந்தர்ப்பத்தின் மூலம் என்னைப் பற்றி சொன்னதில் நீங்கள் செய்த பங்கிற்கு நன்றி. உங்களது வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் நீங்கள் என்னிடம் காட்டிய அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆனால் மிக முக்கியமாக, நான் விளையாடிய அல்லது என்னைச் சுமந்த விதம் குறித்த உங்கள் மதிப்பீட்டில் நீங்கள் நேர்மையாக இருந்த நேரங்களுக்கு நன்றி. உங்களுடையது எளிதான வேலை அல்ல, ஆனால் மிகவும் முக்கியமான ஒன்று. அதை ஒப்புக்கொள்வதற்கு எவரையும் போலவே இப்போது ஒரு நல்ல நேரம். இந்திய கால்பந்தின் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருங்கள். முன்னெப்போதையும் விட இப்போது எங்களுக்கு இது தேவை. வீட்டில் சிறந்த இருக்கைகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், எப்போதும் வைத்திருப்பீர்கள். இந்த 19 ஆண்டுகளில், அந்த அனுபவத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். ஓரிரு விளையாட்டுகளுக்கு நான் உங்கள் டக்அவுட்டில் சேரலாம்” என சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
சாதனை மன்னன் சுனில் சேத்ரி:
39 வயதான சுனில் சேத்ரி ஆடவர் சர்வதேச கால்பந்தாட்ட உலகில், அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் நன்காவது இடத்தில் உள்ளார். கிரிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி மற்றும் அலி டேய் ஆகியோரை தொடர்ந்து, 94 கோல்களுடன் சுனில் சேத்ரி நான்காவது இடத்தில் உள்ளார்.