Kylian Mbappe: 2,720 கோடி ரூபாயை கொடுக்க காத்திருக்கும் சவுதி அரேபியா அணி... புதிய அணியில் இணைவாரா பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பே!
Kylian Mbappe: எம்பாப்பேவிடம் பேச பி.எஸ்.ஜி கிளப் அல்-ஹிலாலுக்கு கிளப்புக்கு அனுமதி வளங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஃபிஃபா இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டீனா அணிகள் மோதின. இரு அணிகளும் போட்டி நேர முடிவில் தலா மூன்று கோல்கள் அடித்து சமநிலை இருந்தது. பின்னர் பெனால்டி முறையில் அர்ஜெண்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த ஃபிஃபா இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்திருந்தாலும், அந்த அணியின் கேப்டனை எம்பாப்பே பார்த்து மிரலாதவர்கள் யாரும் இருக்க முடியாதது. இறுதிப்போட்டியில் கூட எம்பாப்பே மட்டுமே மூன்று கோல்களை எடுத்தார் அர்ஜெண்டினா அணியை அளரவைத்தார்
2017 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம்பாப்பே
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனும் கிலியன் எம்பாப்பே துடிப்பு மிக்க வீரராக காணப்படுகிறார். கடந்த ஆண்டு நடந்த ஃபிஃபா உலககோப்பை போட்டியில் 8 கோல்கள் எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். கிளம் போட்டிகளை பொறுத்தவரை அவர் அங்கு உள்ள பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன்(பி.எஸ்.ஜி) கிளப்புக்காக 2017 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அந்த அணியில் விளையாடிய அவர் இதுவரை 176 போட்டிகளில் 148 கோல்களுக்கு அடித்து அசத்தியுள்ளார்
ஆசிய சுற்றுப் பயணத்தில் எம்பாப்பே இடம்பெறவில்லை
இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா ஆகிய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்துக்கான பி.எஸ்.ஜி கிளப்பில் செல்ல உள்ளது. இதில் எம்பாப்பேவின் பெயர் இடம்பெறவில்லை.அவரை பி.எஸ்.ஜி கிளப் நீண்டகால அடிப்படையில் ஒப்பந்தத்தை நீடிக்க அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அதற்கு எம்பாப்பே தரப்பில் இருந்து எந்த வித முறையான பதில் இல்லை . இதனாலையே அவருக்கு ஆசிய சுற்று பயணத்தின் போது அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதுக்கு காரணம். இதற்கு மேலும் அவரை அணி வைத்திருப்பது வீண் என்பதால் அவரை உடனடியாக பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் கிளப்பில் இருந்து கசிந்துள்ளது.
2,720 கோடியை சம்பளம் கொடுக்க ரெடியாகும் சவுதி அரேபியா
24 வயசாகும் எம்பாப்பேவை தங்கள் அணிக்கு இழுக்க சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-ஹிலால் கிளம் ஆர்வமாக இருக்கிறது. ஒரு சீசனுக்கு உலக சாதனை சம்பளமாக தொகையாக 2,720 கோடி ரூபாயை எம்பாப்பேவுக்கு கொடுக்க ரெடியாக உள்ளது. இதனை தொடர்ந்து எம்பாப்பேவிடம் பேச பி.எஸ்.ஜி கிளப் அல்-ஹிலாலுக்கு கிளப்புக்கு அனுமதி வளங்கியுள்ளது. ஆனால் எம்பாப்பே இந்த மாபெரும் சலுகையை ஏற்றுக்கொள்வாரா என்ற வினாவிற்கு உறுதியான விடை கிடைக்கவில்லை.