மேலும் அறிய

Fact Check: விரைவில் சானியா மிர்சா - முகமது ஷமி திருமணமா..? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Mohammed Shami and Sania Mirza: சானியா மிர்சாவும், முகமது ஷமியும் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய போவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

Mohammed Shami and Sania Mirza: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விவாகரத்து பெற்ற நாள் முதலே, மிர்சா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சாவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்தி ஒன்று பரவ ஆரம்பதித்தது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமியும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. முகமது ஷமியும் சானியா மிர்சாவும் திருமண ஆடையில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சானியா மிர்சாவும், முகமது ஷமியும் விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய போவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

திருமணம் உண்மையா..? 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் நிச்சயத்தார்த்த வைரல் புகைப்படங்கள் போலியானது மட்டுமல்ல, அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளும் பொய்யானவை. மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரின் தரப்பிலிருந்தும் இதுபோன்ற செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படம் கடந்த 2010ம் ஆண்டு நடந்த சானியா மிர்சா - பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் திருமண புகைப்படமாகும். அதில், யாரோ சோயப் மாலிக்கின் தலை பகுதியை மார்பிங் செய்து, அவருக்கு பதிலாக முகமது ஷமியின் புகைப்படத்தை இணைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் கடந்த ஜூன் 12ம் தேதி அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.

தனித்தனியே வாழும் ஷமி - மிர்சா:

முகமது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் திருமண வாழ்க்கை ஏறக்குறைய ஒத்ததாக இருக்கிறது. இருவரும் அவர்களது துணையை பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி, அவரது மனைவி ஹசின் ஜஹானால் மனரீதியாக கஷ்டப்பட்டதாக தெரிவித்தார். இந்த காரணத்திற்காக, ஷமி மற்றும் ஹசீன் பிரிந்து வாழ்கின்றனர்,. ஆனால் அவர்கள் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யப்படவில்லை. 

அதேநேரத்தில், சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்ஷோயப் மாலிக்கை 2010 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார். தற்போது இவர்களும் விவாகரத்து பெற்று தனியே வாழ்கின்றனர். ஷோயப் மாலிக் ஜனவரி 20 அன்று பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget