மேலும் அறிய

ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் அதிமுகவுக்கு எதிரிகள் அல்ல. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தோம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அவரை அதிமுகவில் இணைக்க முடியாது. ஓபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான். அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒருமித்த் கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலின் போது கூட்டணி வைப்போம்.

அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் ஓபிஎஸ். என்னை மத்திய அரசு மிரட்டுகிறதா? ஆட்சியில் இல்லாதபோது உருட்டல் மிரட்டல் எல்லாம் எப்படி எங்களை செய்ய முடியும்? எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து பேசிய இபிஎஸ், தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசியதாகவும் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது எல்லம் நல்லதுக்குதான்; நல்லது நடக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு படையெடுக்கிறார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி இறுதியாகுமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏனென்றால் இதுவரை பாஜகவை திட்டவட்டமாக எதிர்த்த இபிஎஸ் தற்போது சற்று தளர்ந்துள்ளார் என்றே கருதப்படுகிறது. பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காமல் பாஜகவை மட்டும் வைத்து எடப்பாடி பழனிசாமி எப்படி காய் நகர்த்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget