WATCH: உலகக் கோப்பை இறுதிப் போட்டி! இந்திய தேசியகீதம் பாடிய 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் - வைரல் வீடியோ!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தேசிய கீதம் பாடியுள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தேசிய கீதம் பாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி:
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 19) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.
தேசிய கீதம்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானம். இந்த மைதானத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாம். அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் போட்டியை காண்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளனர்.
National Anthem
— SHAKIR (@imsrk_shakir) November 19, 2023
Goosebumps ❤️🥰🥰#INDvsAUSfinal #INDvAUS #Worldcupfinal2023 #INDvsAUSfinal #MissUniverse2023 #INDvAUS #AUSvIND #MissUniverse pic.twitter.com/gbuKpZ1aJr
முன்னதாக, போட்டி தொடங்குதற்கு முன்பு விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர், இந்திய அணி வீரர்கள் மற்றும் மைதானத்தில் கூடியிருந்த 1 லட்சத்து 32 ஆயிரம் பேரும் இந்தியாவின் தேசிய கீதமான ”ஜன கண மன' பாடினார்கள். அப்போது அனைவரும் தேசிய பக்தியுடன் எழுந்து நின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மோடி வருகை:
இந்நிலையில், போட்டியை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்து பலரும் நேரில் பார்த்து வருகின்றனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போட்டியை நேரில் காண்பதற்காக அகமதாபாத் நகருக்கு டெல்லியில் இருந்து விமனம் மூலம் வந்துள்ளார்.
அவர் இன்னும் சற்று நேரத்தில் போட்டியை நேரில் கண்டு ரசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும் இந்திய ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: திணறும் இந்தியா.. கோலி அவுட்.. மைதானத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்..!
மேலும் படிக்க: IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன?