மேலும் அறிய
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகிலேயே பெரியார் சிலை இருப்பதால் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் - அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி ஆஜராகி எதிர்ப்பு.

சீமான்
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
பழனியில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
அந்த மனுவில் ”வரும் ஞாயிற்றுக்கிழமை 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம் தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு என்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம்
அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி. மனுதாரர் அனுமதி கேட்கும் இடம் அருகில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை பேசி வருகிறார். ஏற்கனவே பெரியாரை பற்றி அவதூறாகவும், சிலையை சேதப்படுத்தியும் உள்ளார்கள். இதனால் பல இடங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். எனவே இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தற்போது தைப்பூச விழா நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும் ஆகையால் இவர்கள் மாற்று இடமாக ஆயக்குடி பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவோம் என தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க மறுத்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, பழனியில் பெரியார் சிலை அருகில் கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தார். மேலும் பொதுக் கூட்டத்தை பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22/2/25 அன்று அமைதியான முறையில் கூட்டம் நடத்தலாம் இதற்கு காவல்துறை முறையான அனுமதியும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையவேண்டும் என்றால் இதை செய்ய வேண்டும் - ராஜன் செல்லப்பா கொடுக்கும் ஐடியா
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chennai Central Tower:இனி இதான் சென்னையின் அடையாளம்! 350 கோடியில் 27 மாடியில் வருகிறது சென்ட்ரல் டவர்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion