மேலும் அறிய

IND vs AUS Final Score LIVE: 6 வது உலக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

IND vs AUS World Cup 2023 Final LIVE Score: உலகக் கோப்பை 2023ன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான லைவ் ஸ்கோர் அப்டேட்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

LIVE

Key Events
IND vs AUS Final Score LIVE: 6 வது உலக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Background

IND vs AUS World Cup 2023 Final LIVE Score | இந்தியா ஆஸ்திரேலியா லைவ் ஸ்கோர்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா(India vs Australia) அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

உலகக் கோப்பை இறுதிப்போட்டி:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.  

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதிப்போட்டியை முன்னிட்டு மைதானத்தில் இந்திய விமானப்படையின் சாகசம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் போட்டியை காண மைதானத்திற்கு வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, 1999ம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பின் ஒரு முறை கூட தோல்வியையே சந்திக்கவில்லை. அதேநேரம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2003ம் ஆண்டு தோல்விக்கு பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பப்படுகிறது.

பலம் & பலவீனங்கள்:

12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி, தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எந்தவொரு அநாவசியமான முயற்சிகளையும் செய்யாமல், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. மறுமுனையில். முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் லீக் சுற்றின் முடிவில் தொடர் வெற்றிகளை குவித்தது. வார்னர். டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஜாம்பா மட்டும் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். ஏராளமான நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கலாம்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 150 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 57 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது . 10 போட்டிகளில்  முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

மைதானம் எப்படி?

1.30 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், இன்று ரசிகர்களால் நிரம்பி வழிய உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக இன்றைய ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளரக்ளும் சாதிக்கக் கூடும்.

ப்ளேயிங் 11 அணி: 

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

வெற்றிக்கான வாய்ப்பு: இந்திய அணி வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளது.

21:26 PM (IST)  •  19 Nov 2023

IND vs AUS Final Score LIVE: 6 வது உலக மகுடம் சூடியது ஆஸ்திரேலியா; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று 6வது உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 

21:21 PM (IST)  •  19 Nov 2023

IND vs AUS Final Score LIVE: டிராவிஸ் ஹெட் அவுட்

120 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்த ஹெட் அவுட். 

21:08 PM (IST)  •  19 Nov 2023

IND vs AUS Final Score LIVE: லபுசேன் அரைசதம்..!

களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் லபுசேன் 99 பந்தில் 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:04 PM (IST)  •  19 Nov 2023

IND vs AUS Final Score LIVE: 22 ரன்கள் தேவை

ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 11 ஓவர்களில் 22 ரன்கள் தேவை. 

20:58 PM (IST)  •  19 Nov 2023

IND vs AUS Final Score LIVE: 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா

37 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget