Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
TVK Leader Vijay Gets Y Category Security: தவெக தலைவர் விஜய்க்கு, இந்தியாவின் டாப் பாதுகாப்பு பிரிவுகளில் ஒன்றான Y பிரிவானது வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன? இதுபோன்ற எத்தனை பாதுகாப்பு பிரிவுகள் இருக்கிறது என பார்ப்போம்.
பாதுகாப்பு பிரிவுகள்:
இந்திய குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைவர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என சமூகத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் சமூகத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்குற முக்கிய நபர்களுக்கான, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசாங்கம் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
இந்திய அரசாங்கமானது, வகிக்கும் பதவி மற்றும் அச்சுறுத்தலின் தன்மை குறித்து SPG, Z+, Z, Y+, Y, X என்று ஆறு பிரிவுகளாகப் பிரித்து உள்ளது. இந்த தருணத்தில் ஒவ்வொன்றின் தன்மை குறித்தும் சற்று சுருக்கமாக பார்ப்போம்.
Also Read: மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுகு மோடி கொடுத்தது என்ன?
SPG
Special Protection Group என்ற சொல்லப்படக்கூடிய சிறப்பு பாதுகாப்பு படை இந்திய பிரதமர், அவரோட நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கங்கூடிய பிரிவு. உலகத்தில், எந்த மூலையில் பிரதமரின் நேரடி குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதுதான இவர்களின் வேலையாகும். 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறப்பு பாதுகாப்பு படை பிரதமருக்கும் அவங்களோட குடும்ப உறுப்பினர்களுக்கும் மெய்காவல் படையா செயல்படுகிறது.
இந்திய துணை ராணுவப் படையில இருந்து 3000 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தோட தலைமை செயலகம் மற்றும் மூத்த ஐஏஎஸ் தலைமை இயக்குநரின் தலைமையில் செயல்படுவர்கள் . இந்த சிறப்பு பாதுகாப்பு படைக்கு 2025 -26 ஆண்டுக்கு மட்டும் 489 கோடிய இந்திய அரசாங்கம் நிதியா ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Z +
Z+ பாதுகாப்பு பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், தேசிய பாதுகாப்பு படையோட சிறப்பு பிரிவுச் சேர்ந்த 10 வீரர்கள் அப்புறம் ரயில்வே பாதுகாப்புப்படை, இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்தியப் பாதுகாப்புப் படை, மத்தியத் தொழிற்பாதுகாப்புப் படைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் உட்பட 55 பாதுகாப்பு பணியாளர்கள் இருக்கிறார்கள்.
இதுல குண்டு துளைக்காத வாகனங்களோட சேர்த்து 5 வாகனங்கள் இருக்கும். இதில் முன்னால் பிரதமர், முன்னாள் குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு பாதுகாப்பானது வழங்கப்படுகிறது . தற்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ் நாத்சிங், தமிழ் நடு முதலமைச்சர் ஸ்டாலின், முகேஷ் அம்பானி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு வழங்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Z
Z பிரிவிலையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ற தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவு தான். இதில் 22 காவல் துறையினர் இருப்பார்கள். தேவைக்கு ஏற்ப வீரர்கள், இதில் பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த Z பிரிவிலயும் ஒரு குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனம் பயன்படுத்தப்படும். இந்த பாதுகாப்பு பணிக்கு ஒரு தனிப்படைக்கு மாசம் 16 லட்சம் வர செலவு செய்யப்படுது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த z பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார்.
Y +
Y + பிரிவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ற தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த, 2 முதல் 4 வீரர்கள் தேவைகேற்ப இருப்பார்கள். மொத்தமா 11 பாதுகாப்பு வீரர் இருப்பர். இதில் 2ல் இருந்து 3 வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த பாதுகாப்பு பணிக்கும் ஒரு தனிப்படைக்கு 15 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
Y
இந்த Y பிரிவு பாதுகாப்புதான் தமிழக வெற்றிக் கழகத்தோட தலைவர் விஜய்க்கு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு பிரிவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ற தேசிய பாதுகாப்பு படை எனும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த 1 முதல் 2 வீரர்கள் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.இதனுடன் எட்டு காவல்துறையினரும் இருப்பார்கள். இந்த பிரிவில் 1 அல்லது 2 வாகனங்கள் பாதுகாப்புக்காக பயபடுத்தப்படும். ஒரு தனிப்படைக்கு மாசம் 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும். இந்த 12 லட்சம் ரூபாயும் மத்திய அரசு தான் செலவு செய்யும். தமிழ் நாட்டுல Y பிரிவு பாதுகாப்பு படை தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது மூலமாக, மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். மேலும், விஜய்யை தன்பக்கம் ஈர்க்க பாஜக காய் நகர்த்துவதாகவும் சில கருத்துக்கள் எழுந்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், உளவுத்துறை கொடுத்த தகவலின் படிதான் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்று முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
Also Read; வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..
X
இந்த பிரிவில் 2 காவல்துறையினர் மட்டும் தான் இருப்பாங்க.இதில் தேசிய பாதுகாப்புபடை சிறப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள்.இதில் 1 அல்லது 2 வாகனம் பயன்படுத்தப்படும்
இந்நிலையில், இந்தியாவின் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு, தனியாக சிறப்பு வாய்ந்த ( PBG ) குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு படை என்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

