IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் தோற்ற 1983 மற்றும் 2011ம் ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
![IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன? India Lost Toss and Won Final 1983 2011 World Cup IND Lost Toss 2023 World Cup Final Sports News Tamil IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/00eb72a626028ac246974978255ad1e21700383967594102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டாஸ் வரலாறு:
இந்திய அணி மூன்றாவது முறையாக 4வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்திய அணி கோப்பையை வென்ற 2 முறையும் போட்டியில் டாஸ் தோற்றுள்ளது. மேலும், டாஸ் தோற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த அணி அகமதாபாத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியிலும் டாஸ் தோற்றுள்ளது. இதனால், இந்திய அணி இன்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி இதற்கு முன்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதன்முறையாக 1983ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய கேப்டன் கபில்தேவ் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாயிடம் டாஸை தோற்றார்.
1983, 2011ம் ஆண்டு:
அந்த போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதில் 183 ரன்களில் ஆல் அவுட்டான இந்திய அணி, வெஸ்ட் இணடீஸ் அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இதையடுத்து, இந்திய அணி 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் இலங்கை அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, இலங்கை கேப்டன் சங்ககராவிடம் டாஸ் தோற்றார். இதனால், இந்திய அணி இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 275 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி 48.2 ஓவர்களில் 277 ரன்கள் குவித்து 2வது முறையாக உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்த நிலையில், இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸிடம் டாஸ் தோற்றார். இதனால், 1983 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடந்தது போலவே இந்திய அணி இன்றும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி கடந்த 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டபோது கேப்டன் கங்குலி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
மேலும் படிக்க: IND Vs AUS CWC 2023: உலகக் கோப்பை பைனலில் மோதும் இந்தியா -ஆஸ்திரேலியா.. இரு அணிகள் இடையேயான புள்ளி விவரங்கள்
மேலும் படிக்க:Rahul Dravid: அன்று வீரன்.. இன்று ஆசான்.. உலகக் கோப்பையை முத்தமிடுவாரா ராகுல் டிராவிட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)