IPL 2024: படிக்கல்லை லக்னோவுக்கு கொடுத்து அவேஷ் கானை வாங்கிய ராஜஸ்தான் அணி!
வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
![IPL 2024: படிக்கல்லை லக்னோவுக்கு கொடுத்து அவேஷ் கானை வாங்கிய ராஜஸ்தான் அணி! Royals trade Padikkal for Super Giants' Avesh in straight swap IPL 2024: படிக்கல்லை லக்னோவுக்கு கொடுத்து அவேஷ் கானை வாங்கிய ராஜஸ்தான் அணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/502055497c72e74951b9a4d7836deda61700654319373572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல்:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது உலகில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் அதில் முக்கியமானது ஐபிஎல் தொடர். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனிடையே, ஐபிஎல் தொடரின் 2024 சீசனை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக வீரர்களை வாங்குவதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை விடுவித்து இறுதிக்கட்ட அணி பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவேஷ் கான் மாற்றம்:
இந்நிலையில், தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் ராஜஸ்தான் ராயல் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, நாளை (நவம்பர் 23) கேரளாவில் உள்ள விசாகபட்டிணத்தில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இளம் வீரர்களை கொண்ட இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானும் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவேஷ் கான் சுமார் 10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேபோல், மற்றொரு வீரரான டேவ்தட் படிக்கல்லை ராஜஸ்தான் அணி சுமார் 7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனிடையே, இந்த இரண்டு வீரர்களையும் இவ்விரு அணிகளும் தக்க வைத்துக் கொண்டன. இச்சூழலில் தான் தற்போது இரண்டு வீரர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 17 போட்டிகளிலும் , 2023 ஆம் ஆண்டில் 11 போட்டிகளிலும் விளையாடிய டேவ்தட் படிக்கல் ராஜஸ்தான் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. மொத்தம் அவர் விளையாடிய 28 போட்டிகளில் 23.59 என்ற சராசரியில் 637 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். மேலும், 92 ஐபிஎல் போட்டிகளில் 33.34 சராசரியில் 17 அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் என 2768 ரன்கள் எடுத்துள்ளார். இச்சூழலில் தான அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், அறிமுக ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு விளையாடிய அவேஷ் கான் தற்போது லக்னோ அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 18.75 என்ற சராசரியில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனிடையே தான் டெல்லி அணியில் இருந்த விடுவிக்கப்பட்ட அவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது. அதேபோல்,தற்போது ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)