Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
பாகிஸ்தானுக்காக உளவு பார்தததாக கைது செய்யப்பட்ட ஹரியானாவின் ஜோதி மல்ஹோத்ரா, ஐஎஸ்ஐ அதிகாரியிடம் பேசிய வாட்ஸ்அப் சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தன்னை திருமணம் செய்யுமாறு அவர் கேட்டது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தி கைது செய்யப்பட்ட 6 பேரில், யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா கவனம் பெற்றார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் வாட்ஸ்அப் சேட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியிடம், தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டதும் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான ஜோதி மல்ஹோத்ரா
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா என்கிற ஜோதி ராணி.
‘டிராவல் வித் ஜோ‘, ‘நோமடிக் லியோ கேர்ள் வான்டரர்‘ என்ற பெயர்களில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு செல்ல ஏஜென்ட் விசா பெறும்போது, பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக, பாகிஸ்தானில் உள்ள அலி அஹ்வான் என்பவரை ஜோதி சென்று சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த எஹ்சான்-உர்-ரஹீம் தான் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவால் நாடு கடத்தப்பட்டவர்.
இந்நிலையில், ஜோதி பாகிஸ்தானுக்கும் சென்று வீடியோ எடுப்பது போன்று, அங்கு இருந்தவர்களுடன் வலுவான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். அவர்களுடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இவர், டிராவல் ப்ளாக்(Blog) என்ற பெயரி பல முறை பாகிஸ்தானிற்கு பயணம் செய்து, அங்கு பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து, ராணுவம் உள்ளிட்ட இந்தியாவிற்கு எதிரான பல தகவல்களை பகிர்ந்தகொண்டதாகவும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது.
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ சிக்கிய ஜோதியின் வாட்ஸ்அப் சேட்
ஜோதியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே கூறப்பட்ட தகவலை உறுதி செய்யும் விதமாக, தற்போது அவரது வாட்ஸ்அப் சேட் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-ன் அதிகாரி ஒருவரிடம் அவர் சேட் செய்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதில் இருந்த ஒரு சேட்டில், இஸ்லாமாபாத்துடன் அவருக்கு இருந்த உணர்ச்சிப்பூர்வமான தொடர்பை காட்டும் விதமாக, “பாகிஸ்தானில் என்னை திருமணம் செய்துகொள்‘ என பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியிடம் கேட்டது இம்பெற்றுள்ளது.
இது இல்லாமல், மேலும் பல சேட்டுகளில், அவர்கள் சமிக்ஞை வார்த்தைகளில்(Code Words) பேசிக்கொண்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக, இந்தியாவின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“துபாயிலிருந்து ஜோதிக்கு வந்த பணம்“
ஜோதியிடம் நடைபெற்றுவரும் விசாரணையின்போது, அவரது 4 வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களையும் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு வங்கிக் கணக்கில், துபாயிலிருந்து ஜோதிக்கு பணம் அனுப்பப்பட்ட விவரங்கள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர் என்ஐஏ அதிகாரிகள். அதன் விசாரணைக்குப் பிறகு, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















