Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் ரவிமோகன் தனக்கு மாதந்தோறும் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டுள்ளார். இவருக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர்.
மாதந்தோறும் 40 லட்சம் ரூபாய்:
இதன்பின்பு, இவர்கள் பிரிவு குறித்து இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில், ரவி மோகன் தனக்கு மாதந்தோறும் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் வரும் ஜுன் மாதம் 12ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நடிகர் ரவிமோகனுக்கு உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி மாதந்தோறும் 40 லட்சம் ரூபாய் கேட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்து:
கடந்தாண்டு ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்த பிறகு, இது ரவிமோகனின் தனிப்பட்ட முடிவு என்றும், தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஆர்த்தி கூறியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
பின்னர், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் இணைத்து பேசப்பட்டது இந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ரவி மோகன் தான் திருமண வாழ்வில் எதிர்கொண்ட இன்னல்களை பரபரப்பான அறிக்கையாக வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டுகள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
ரசிகர்கள் ஷாக்:
இதையடுத்து, ரவி மோகன் மீது ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சூழலில், கெனிஷாவும் ரவிமோகனும் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரவி மோகனிடம் ஆர்த்தி ரூபாய் 40 லட்சத்தை மாதந்தோறும் ஜீவனாம்சமாக கேட்டது பெரும் அதிர்வலையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனுக்கும் - ஆர்த்திக்கும் ஆரவ், அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.






















