T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பையை வென்றால் பாகிஸ்தான் அணிக்கு ஜாக்பாட்! இப்படி ஒரு பரிசா?
2024 டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் சீசன் 17 மே 22 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ஜூன் 1 ஆம் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ஜூன் 9 ஆம் தேதி விளையாடுகிறது இந்திய அணி.
டி20 உலகக் கோப்பை:
முன்னதாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இது அந்நாட்டு ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
பின்னர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிவரை முன்னேறி இருந்ததது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணியை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்தியவர் பாபர் அசாம்.
பயிற்சியாளர் கில்லெஸ்பி:
இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்டரான இவர் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இச்சூழலில் தான் புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேரி கிர்ஸ்டனை நியமித்தது. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அனைத்து வடிவங்களிலும் உதவி பயிற்சியாளராக அசார் மஹ்மூத் செயல்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
ஒரு லட்சம் அமெரிக்க டாலர்:
இந்நிலையில் தான் டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் சிறப்பு பரிசு வழங்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்திருக்கிறார். இது குறித்தான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சமூக வலைதளத்தில் “டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் அணியில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி அறிவித்திருக்கிறார்.
PCB Chairman Mohsin Naqvi interacted with the Pakistan players today at the Gaddafi Stadium in Lahore and wished them well for the upcoming assignments. He also presented special jerseys to @iNaseemShah and @iMRizwanPak for achieving 100 international wickets and completing 3,000… pic.twitter.com/eIviKB7nsY
— Pakistan Cricket (@TheRealPCB) May 5, 2024
மேலும் அவர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்றும், இறைவன் விரும்பினால் வெற்றி கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். நாடு வீரர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் “என்று கூறப்பட்டிருக்கிறது.