Mohammad siraj: காதல் வலையில் டிஎஸ்பி சிராஜ்? அந்த பெண் தான் இந்த பெண்ணா! உண்மை என்ன?
Mohammed Siraj: அவள் எனக்கு தங்கை மாதிரி என ஜனாய் போஸ்லே உடனான காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் வீரரான முகமது சிராஜ் பிரபல பாடகி ஆஷா போஸ்லே வின் பேத்தியை டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு சிராஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
முகமது சிராஜ்:
இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா தொடரில் சரியாக பந்து வீசாததால் அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிகளுக்கு நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: IND Vs ENG 3rd T20: இந்தியா வசமாகுமா டி20 தொடர்? இங்கிலாந்திற்கு வாய்ப்பிருக்கா? ராஜ்கோட் மைதானம் இதுவரை எப்படி?
இந்நிலையில் பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தியான ஜனாய் சிராஜ் டேட்டிங் செய்வதாக செய்திகள் பரவி வந்தன. மேலும் சமீபத்தில், ஜனாய் போஸ்லேவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிராஜ் பங்கேற்றார். இருவரும் அந்த பிறந்தநாள் பார்ட்டியில் மிக நெருக்கமாக காணப்பட்டதால் இருவரும் காதலித்து டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது..
பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே. ஜானாய் பாலிவுட்டில் பாடகியாகவும், படங்களில் நடித்து வருகிறார். ஜானாய் சமீபத்தில் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், கொண்டாட்டத்தின் போது சிராஜ் மற்றும் ஜானாய் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இருவரும் நெருக்கமாக இருப்பதால் காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.
View this post on Instagram
உண்மை என்ன?
இந்த வதங்தியானது காட்டுத்தீ போல பரவிய நிலையில் இருவரும் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில ஸ்டோரியாக பகிர்ந்த ஜயக சிராஜ் எனக்குஅண்ணனைப் போன்றவர் என்று பதிவிட்டு இருந்தார்.
அதனை ரீ ஷேர் செய்த சிராஜ் ஜனாய் தனக்கு தங்கையை போன்றவர் என்று கூறினார். இருவரும் விளக்கமளித்த நிலையில் இந்த வதந்தி செய்தி தற்போது முடிவுக்கு வந்தது. மேலும் சிராஜ் இதற்கு முன்னர் பாலிவுட் நடிகையும் மாடலுமான மஹிரா சர்மாவை காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தில் விஜய்யின் சாட்டை யார் முகத்திரையை கிழிக்க போகுது?