IND Vs ENG ODI: கம்பேக் வருமா கோலி, ரோகித்? 15 மாதங்களாக கிடைக்காத வெற்றி? இந்தியா Vs இங்கிலாந்து ஒரு நாள் தொடர்..
IND Vs ENG ODI Series: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.

IND Vs ENG ODI Series: இங்கிலாந்து அணி உடனான ஒருநாள் தொடரில், கேப்டன் ரோகித் சர்மா, கோலி உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்புகின்றனர்.
இந்தியா Vs இங்கிலாந்து - ஒருநாள் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதனை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.
மீண்டு வருமா இந்திய அணி?
இந்திய அணி கடந்த ஆண்டு 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. அதில் ஒரு போட்டி டிரா ஆன நிலையில், இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன. கடைசியாக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது 15 மாதங்களாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றியயே பதிவு செய்யவில்லை. இருப்பினும் கடந்த கால கசப்புகளில் இருந்து வெளியேறி, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்று, துபாயில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. குறிப்பாக தொடர்ந்து ரன் சேர்க்க முடியாமல் திணறி வரும், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஃபார்முக்கு திரும்புவார்களா? மூன்றாவது போட்டியில் களமிறங்கி, நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தனது உடல்தகுதியை உறுதி செய்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மறுமுனையில் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரை வென்று சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றி முகத்துடன் களமிறங்க தீவிரம் காட்டுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டிகள் எங்கு? எப்போது? நடைபெறும்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| பிப்.6, வியாழன் | இந்தியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி |
1:30 PM | விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், நாக்பூர் |
| பிப்.9, ஞாயிறு | இந்தியா vs இங்கிலாந்து, 2வது ஒருநாள் போட்டி | 1:30 PM |
பாராபதி ஸ்டேடியம், கட்டாக்
|
| பிப்.12, புதன் | இந்தியா vs இங்கிலாந்து, 3வது ஒருநாள் போட்டி | 1:30 PM | நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் |
இந்தியா vs இங்கிலாந்து ODI அணிகள்:
இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட்
இங்கிலாந்து அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்
போட்டி நேரலை:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் நேரலை, தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அதோடு, Disney+ Hotstar செயலி மற்றும் இணையதளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.




















