IND Vs ENG 3rd T20: இந்தியா வசமாகுமா டி20 தொடர்? இங்கிலாந்திற்கு வாய்ப்பிருக்கா? ராஜ்கோட் மைதானம் இதுவரை எப்படி?
IND Vs ENG 3rd T20: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி, நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
IND Vs ENG 3rd T20: ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகள் தொடர்பான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
இந்தியா Vs இங்கிலாந்து:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் வருண் சகரவர்த்தி ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இரண்டாவது போட்டியில் திலக் வர்மா தனிநபராக போராடி வெற்றியை வசமாக்கினர். இதனால், இந்தியா தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியாவும் முனைப்பு காட்டுகிறது. மறுபுறம் நாளைய போட்டியில் வென்று, தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இங்கிலாந்து ஆர்வம் காட்டுகிறது. இதனால், நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி நேரலை:
ராஜ்கோட்டில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் டி20 போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
ராஜ்கோட் மைதானம் எப்படி?
ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 150 ரன்களை கடந்த நிலையில், 4 போட்டிகளில் சுமார் 195 ரன்களை எட்டியுள்ளது. கடைசியாக கடந்த 2023ம் ஆண்டில் நடந்த போட்டியில், இலங்கை அணியை இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குறிப்பாக தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அந்த போட்டியில் சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கோட் மைதான புள்ளி விவரங்கள்:
- போட்டிகள்: 5
- முதலில் பேட்டிங் செய்து வென்றது: 3 போட்டிகள்
- சேஸிங்கில் வென்றது: 2 போட்டிகள்
- அதிகபட்ச ஸ்கோர்: 2023ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது
- குறைந்தபட்ச ஸ்கோர்: 2022ல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 87 ரன்களுக்கு ஆல் அவுட்
- அதிகபட்ச வெற்றிகரமான சேஸ்: 2013ல் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 202 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து சேஸ் செய்தது
- குறைந்த இலக்கில் வெற்றி: 2022ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 169 ரன்கள் என்ற இலக்கை இந்தியா அணி டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றது
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 189
- அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 2023ல் இலங்கைக்கு எதிராக 51 பந்துகளில் 112 ரன்கள்
- சிறந்த பந்துவீச்சு: அவேஷ் கான் (இந்தியா) - 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 18/ 4
- மொத்த சிக்ஸர்கள்: 65 சிக்ஸர்கள்
- மொத்த பவுண்டரிகள்: 160 பவுண்டரிகள்
- மொத்த 50s: 5 அரைசதங்கள்
- மொத்த 100s: 2 சதங்கள்