மேலும் அறிய
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு - 4 ஆயிரம் போலீசார் குவிப்பு
மதுரை மூலக்கரை பகுதி முதல் திருப்பரங்குன்றம் மழை வரையிலும் முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் ஏற்பட்ட சர்ச்சை 144 தடை
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கூட உள்ளதாக அறிவித்துள்ளதால், மதுரை மாநகர் பகுதியில் 2500 காவல் துறையினரும் புறநகர் பகுதியில் 1500 காவல் துறையினர் என 4000 காவல் துறையினர் மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மூலக்கரை பகுதி முதல் திருப்பரங்குன்றம் மழை வரையிலும் முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4000 மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு
திருப்பரங்குன்றம் பகுதியில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் பகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பலத்த சோதனை பின்னரே அனுமதி இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இது போன்ற போராட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4000 மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு மாவட்ட எல்லை பகுதிகளில் ஆங்காங்கே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.
ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்
மேலும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தங்கு விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். தென்மண்டல ஐஜி மற்றும் மாநகர காவல் ஆணையர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணிகளை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் கூடுவதற்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆங்காங்கே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைப்பு - திருப்பரங்குன்றத்தில் சந்தேகத்துக்குரிய நபர்கள் கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion