Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தில் விஜய்யின் சாட்டை யார் முகத்திரையை கிழிக்க போகுது?
ஜன நாயகன் படத்தின் 2ஆவது லுக் போஸ்டரில் விஜய் சாட்டையை சுழட்டுவது போன்று காட்டப்பட்டுள்ள நிலையில் அவர் யார் முகத்தை கிழிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரசியல் பிரச்சாரத்திற்கு தயாராகி வரும் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். தற்காலிமாக தளபதி 69 என்ற டைட்டிலில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தலைப்பு விஜய்யின் ஃபர்ஸ்ட் மூவி படத்தின் தலைப்பான 'நாளைய தீர்ப்பாக' இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் 76ஆவது குடியரசு தினமான நேற்று தளபதி 69 படத்தின் டைட்டில் வெளியானதோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செக்ண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அஜித்திற்கு ஒருபக்கம் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விஜய்யோட தளபதி 69 படத்தின் டைட்டில், போஸ்டர்கள் அறிவிக்கப்படவே ரசிகர்களின் கவனம் முழுவதும் விஜய் பக்கம் திரும்பியது. ஏற்கனவே முதல் போஸ்டரில் விஜய் செல்ஃபி எடுப்பது போன்றும், அவரது தொண்டர்கள் கூட இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், 2ஆவது லுக் போஸ்டரில் விஜய் சாட்டையை சூழட்டுவது போன்று காட்டப்பட்டுள்ளது.
விஜய்க்கு முன்னதாக சினிமாவில் சாதனை படைத்த கமல் ஹாசன் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை அரசியல் மேடையாக்க தவறியதில்லை. உதாரணத்திற்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, விஜய்காந்த் நடித்த படங்களிலும் சரி அரசியல் வசனங்கள் இடம் பெற்றன.எம் .ஜி.ஆரும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை என கூறலாம்.
தற்போது விஜய்யும் அதற்கான முயற்சிகளை சமீப காலமாக தனது படங்களில் பயன்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கிய விஜய், சில தினங்களுக்கு முன்பு பரந்தூரில் ஆவேசமாக பேசி மக்களை கவர்ந்தார். ஊழல் ஆட்சிக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் களமிறங்கிய விஜய் ஜன நாயகன் படம் ஒரு அரசியல் படமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில்... இதன் மூலமாக தனது சாட்டையால் யாருடைய முகத்தை கிழிக்க போகிறார் எங்கிற கேள்விகளை நெட்டிசன்கள் முன் வைத்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

