"முதுகுல குத்திட்டீங்க மோடி" மிடில் CLASS-க்கு துரோகம்! வைரலாகும் ராகுல் சம்பவம்!
2025 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதில் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது, நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு முன்பு மிடில் கிளாஸ் மக்கள் பிரதமருக்கு ஆதரவு அளித்தார்கள்
கொரோனா சமயத்தில் பிரதமர் மிடில் கிளாஸ் மக்களிடம் வீட்டில் கைதட்டவும், கோஷம் எழுப்பவும் உத்தரவிட்டார்
மிடில் கிளாஸ் மக்கள் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அதை செய்தனர்
அடுத்ததாக, மொபைல் ஃபோனில் லைட் அடிக்க சொன்னார்
இந்தியா முழுக்க மிடில் கிளாஸ் மக்களின் மொபைல் ஃபோனில் லைட் எரிந்தது
ஆனால் இந்த பட்ஜெட்டில் அதே மிடில் கிளாஸை முதுகில் குத்தியுள்ளீர்கள்
மற்றவர்களை நெஞ்சிலும் அடித்திருக்கிறீர்கள்
இந்தியாவில் ஏழை மக்கள் கனவு காணக்கூடாதா?
Indexation முறையை முதுகுக்கு பின்னால் ரத்து செய்தீர்கள்
மூலதன ஆதாய வரியையும் முதுகுக்கு பின்னால் திருடுனீர்கள்
நீண்டகால மூலதன ஆதாய வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்துனீர்கள்
குறுகிய கால வரியை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்தீர்கள்
மொத்தத்தில் இங்குள்ள மக்களிடம் இருந்து திருடுனீர்கள்!
இந்த வீடியோவை பகிர்ந்து கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் மோடி அரசுக்கு தெரிவித்த எதிர்ப்பின் எதிரொலியே இந்த பட்ஜெட் என நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.





















