INDvsBAN: வங்கதேச பந்துவீச்சை நொறுக்கும் இந்தியா..! சதமடித்து அசத்திய சுப்மன்கில் அவுட்..!
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் சதமடித்து அசத்தியுள்ளார்,
வங்காளதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 147 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து அசத்தியுள்ளார் சதமடித்த உடனேயே அவர் அவுட்டாகியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
வங்காளதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 147 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து அசத்தியுள்ளார். சதமடித்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆட முயற்சித்த சுப்மன்கில் மெஹிதி ஹாசன் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 152 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 110 ரன்களில் அவுட்டானார்.
முன்னதாக, வங்கதேசத்தை முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருட்டிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரும், கேப்டனுமாகிய கே.எல்.ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்ப, அடுத்து சுப்மன்கில்லும், புஜாராவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாகவும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடினர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் ஏறியது.
புஜாரா நிதானமாக ஆட, சுப்மன்கில் கில் அடித்து ஆடினார். இதனால், இருவரும் அரைசதம் கடந்தனர். அரைசதம் கடந்த பின்னர் சுப்மன்கில் அடித்து ஆடினார். இதையடுத்து, அவர் 148 பந்துகளில் சுப்மன்கில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். 12வது டெஸ்ட் போட்டியில் ஆடும் சுப்மன்கில்லுக்கு இதுதான் முதல் சதம் ஆகும. இதற்கு முன்பாக அவர் 4 அரைசதங்களை விளாசியுள்ளார்.
சதமடித்த பிறகு சிக்ஸர் அடித்த சுப்மன்கில் 110 ரன்களில் மெஹதிஹாசன் பந்தில் அவுட்டானார். இதையடுத்து, விராட்கோலி களமிறங்கியுள்ளார். மறுமுனையில் சிறப்பாக ஆடி வரும் புஜாரா தன்னுடைய 35வது டெஸ்ட் அரைசதம் விளாசியுள்ளார். தற்போது வரை இந்திய அணி 55 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 106 பந்துகளிதல் 9 பவுண்டரியுடன் 74 ரன்களுடனும், விராட்கோலி 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தற்போது வரை 472 ரன்களுடன் முன்னிலை வகித்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அபார அரைசதங்களின் உதவியுடன் 404 ரன்களை குவித்தது. வங்கதேசத்திற்கு எதிராக முதல் இன்னிங்சில் குல்தீப்யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.