Sri Lanka vs Pakistan: டாஸ் வென்றார் பாபர் அசாம்.. பாகிஸ்தான் முதலில் பேட்டிங்..! சுழலில் அசத்துமா இலங்கை..?
Asia Cup 2023 SL vs PAK: இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
ஆசிய கோப்பையில் இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இலங்கை - பாகிஸ்தான்:
ஆசிய கோப்பைத் தொடரில் கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதி வருகின்றனர். இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கே தொடங்க வேண்டிய இந்த போட்டி காரணமாக சற்று முன் தொடங்கியது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு அணியினரும் 45 ஓவர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லும் நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டி மழையால் ரத்தானாலும் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி முன்னேறிவிடும். அதனால், இலங்கை அணியை காட்டிலும் கூடுதல் நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
இறுதிப்போட்டிக்கான மோதல்:
பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், சல்மான், முகமது ஹாரிஸ், ஷதாப்கான் என பாகிஸ்தான் அணி பலமிகுந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணி என்றாலும் இந்திய அணிக்கு எதிராக அவர்களது பேட்டிங் எடுபடாதது இலங்கை அணிக்கும் தெம்பை அளித்திருக்கும். மேலும், இலங்கை அணியினர் சுழலில் அசத்தலாக செயல்படுவது அந்த அணியினருக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மழை மீண்டும் பெய்து ஆட்டம் டக்வொர்த் லிவீஸ் விதிக்கு செல்வதற்கு கூட இரண்டு அணிகளும் கட்டாயம் பேட் செய்திருக்க வேண்டும். இதனால், முதலில் பேட் செய்யும் பாகிஸ்தான் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. அதேசமயம், இலங்கை அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாலும், நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தக்க இறுதிப்போட்டிக்கு செல்ல அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
மழை வருமா? வராதா?
மழையால் ஆட்டம் அவ்வப்போது தடைபடும் அபாயமும் இருப்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் திக், திக் மன நிலையிலே உள்ளனர். பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் தலைமையில் பக்கர் ஜமான், அப்துல்லா ஷபிக், முகமுது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதாப்கான், முகமது நவாஸ, ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான்கான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
கடந்த போட்டியில் காயம் அடைந்த நசீம்ஷா, ஹாரிஸ் ராஃப் இந்த போட்டியில் களமிறங்கவில்லை. அவர்கள் இல்லாததும் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக உள்ளது. பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம், ஜமான் கான் பந்துவீச்சில் அசத்தினால் நிச்சயம் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.
மேலும் படிக்க: Asia Cup 2023 Final: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இருக்கு கனமழை.. கோப்பை யாருக்கு..? ரிசர்வ் டே இருக்கா..?
மேலும் படிக்க: SL vs PAK: இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலபரீட்சை