Ruturaj Gaikwad : "விராட் நீண்ட காலமாக இதை செய்துவருகிறார்...ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட்
விராட் கோலி எதிரணியில் இருக்கும்போதெல்லாம், அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாக இருக்கும்: ருதுராஜ் கெய்க்வாட்

ஐ.பி.எல் 2025
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிய, பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 7 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நாங்கு இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தொடரின் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோஸ்டாரின் 'Star Nahi Far'
ஜியோஸ்டாரின் "ஸ்டார் நஹி ஃபார்" நிகழ்ச்சியில் பிரத்தியேகமாகப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிராக விளையாடுவது மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியை எதிர்கொள்வது பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது
விராட் கோலி பற்றி ருத்துராஜ்
"ஆர்சிபியை எதிர்த்து விளையாடுவதை மிகவும் எதிர்பார்க்கிறேன், குறிப்பாக ரஜத் (பட்டிதார்) புதிய கேப்டனாக இருப்பதால். ரஜத் கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன், நான் அவருக்கு செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தேன். நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம், ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். மேலும், ஆர்சிபி எப்போதும் வலுவான அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், விராட் கோலி எதிரணியில் இருக்கும்போதெல்லாம், அவர் விளையாடும்போதெல்லாம், அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் ஒரு மோதலாக இருக்கும். அவர் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார், ஆர்சிபிக்காகவும் நாட்டிற்காகவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே, இது எப்போதும் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். மேலும், மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்தபடியாக, இது நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கும் இரண்டாவது போட்டியாகும்."
வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் பரபரப்பான போட்டிக்கு தயாராகுங்கள். பரம எதிரிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் சென்னையிலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நேரலையில் அனைத்து ஆட்டத்தையும் ஜியோஸ்டார் நெட்வொர்க்கில் மட்டும் பாருங்கள்!

