ISSF President's Cup: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் ருத்ராக்ஷ் பட்டீல்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு பிரசிடென்ட் கோப்பை போட்டியில் இந்திய வீரர் ருத்ரான்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு பிரசிடென்ட் கோப்பை போட்டியில்
இந்திய வீரர் ருத்ரான்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார்.
எகிப்தின் கைரோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் தங்கம் வென்றார்.
18 வயதாகும் இளம் வீரரான ருத்ராக்ஷ் பாட்டீல், இத்தாலியைச் சேர்ந்த டானிலோ சொல்லாசோவை 16-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்திலேயே ருத்ராக்ஷ் 6-0 என்ற கணக்கில் எதிரணி வீரரை வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருத்ராக்ஷ், 10.9. 10.8, 10.7 ஆகிய புள்ளிகளைப் பெற்று தங்கத்தை தன் வசமாக்கினார்.
முன்னதாக, ஸ்லோவேகியாவின் பாட்ரிக் ஜனியை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தினார்.
அதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய என்ற பெருமையையும் பெற்றார்.