மேலும் அறிய
மதுரையில் 'கூலி' கொண்டாட்டம்: ரஜினி ரசிகர்கள் ஆட்டம்! டிக்கெட் ஹவுஸ்ஃபுல், எதிர்பார்ப்பை எகிற வைத்த கொண்டாட்டம்!
மதுரையில் கூலிபட கொண்டாட்டம்... அதே ஸ்டெயிலில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் !

கூலி திரைப்படம் மதுரை
Source : whats app
கூலி படத்தைப் பொறுத்தவரை அதற்கு வசூல் ரீதியாக மிக சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்த ஓப்பனிங்கை படம் அடுத்தடுத்த நாட்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.
ரஜினியின் கூலி திரைப்படம்
Cooli ; சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டிக்கெட் ஆன்லைனில் ஓபன் ஆனவுடனே டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றக ஆரம்பித்தது. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் கூலி. இன்று 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
தொடர் விடுமுறையில் கூலி
இன்று 14ம் தேதி வெளியான கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியான நிலையில், நாளை வெள்ளிக்கிழமை சுதந்திர தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என 4 நாட்கள் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் கூலி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றே கருதப்படுகிறது.
தியேட்டரில் விசில் சத்தம் அதிர
இந்நிலையில் கூலி பட கொண்டாட்டம் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுது. இதற்காக அதிகாலையே தியேட்டர்கள் முன் ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். பால்குடம் எடுத்தல், கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல், பால் அபிஷேகம், ட்ரம் செட், கட்டவுட்டுகள், கலேபரங்கள் என வழக்கமான ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் அடங்கியது. இந்நிலையில் பல்வேறு தியேட்டர்களில் 9 மணிக்கே படம் துவங்கியது. தொடர்ந்து படத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தியேட்டரில் விசில் சத்தம் அதிர ரஜினி ரசிகர்கள் தங்களது தலைவர் படத்தை கொண்டாடி தீர்த்தனர். கையில் கூலி பட ஸ்டெயிலில் பேஜ் கட்டி வந்தது குறிப்பிடதக்கது.
தொடருமா லோகேஷின் வெற்றிப்பயணம் ?
லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைப் போல கூலி படத்திலும் அவரது தனித்துவமான டச் இருக்கவே செய்கின்றன. ரஜினிக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டைட்டில் கார்டு. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பது , இடைவேளைக் காட்சியில் விண்டேஜ் பாடல் வைத்து முடிப்பது என தனது தனித்துவமான அடையாளத்தை படத்தில் வைத்துள்ளார். நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அனிருத் காட்சிகளை தனது இசையால் உயர்த்துகிறார். ஆனால் கதையைப் பொறுத்தவரை படம் மிக வழக்கமான திருப்பங்களுடன் செல்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைக் காட்டிலும் குறைவான சுவாரஸ்யத்துடன் கூலி படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்
முதல் தோல்வியா ?
கூலி படத்திற்கு திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. இதனால் முதல் காட்சியின் விமர்சனங்களை வைத்து படம் வெற்றியா தோல்வியா என்பதை தீர்மாணிக்க முடியாது. மேலும் ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்த பின்னரே அதை சொல்ல முடியும். மேலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது படத்தின் வசூல்தான். கூலி படத்தைப் பொறுத்தவரை அதற்கு வசூல் ரீதியாக மிக சிறப்பான ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்த ஓப்பனிங்கை படம் அடுத்தடுத்த நாட்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதே கேள்வி.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















