Top 10 News Headlines: தூய்மைப் பணியாளர்கள் கைது, விமான கட்டண உயர்வு- ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Aug 14th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

தூய்மைப்பணியாளர்கள் கைது
சென்னை ரிப்பன் மாளிகை முன் 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப்பணியாளர்கள் இரவில் கைது.போராட்டம் செய்த தூய்மைப்பணியாளர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள் என 900 பேர் கைது செய்யப்பட்டனர்; ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் முழுமையாக அகற்றப்பட்டது.
இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு!
தெற்கு ரயில்வே அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; அஞ்சல் தொடர்புகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை இந்தியில் வெளியிட நிர்வாகம் உத்தரவு."ஆக. 14 முதல் செப்.15 வரை இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; ரயில்வே அலுவலகப் பணிகளில் இந்தி மொழி பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்" என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சரக்கு விமானத்தில் தீ விபத்து
சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது.கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தின் 4வது என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது; தீயணைப்பு வீரர்கள் உடனடியாகதீயை அணைத்தனர்; விமான ஊழியர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பாராட்டு!
“பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் வர்த்தகத்திலும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. கனிமங்கள், ஹைட்ரோகார்பன் போன்ற துறைகளில் இருநாடுகளின் புதிய ஒத்துழைபபின் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது" மேலும் பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எகிறிய விமான விலை:
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு. சென்னையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, கோவைக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி.சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது.
வருண்குமார் விசாரணை
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு - புழல் சிறையில் உள்ள ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவிடம் சிபிசிஐடி டி.ஐ.ஜி. வருண் குமார் நேரில் விசாரணை.
மூக்கை குதறிய நாய்
பூவிருந்தவல்லி அருகே கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பாதுகாப்புக்காக இருந்த ராட்வீலர் நாய் கடித்து ஊழியர் படுகாயம்.நாய் கடித்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவரின் மூக்கு துண்டானது. மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு!
மும்பை தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார்.இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை காவல் நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்குப் பதிவு செய்தனர்,
டிரம்ப் எச்சரிக்கை:
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை என்றால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். அது எப்படி |இருக்கும் என்பதை நான் கூற வேண்டியிருக்காது. கடுமையான ஒன்றாக இருக்கும்” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
வானிலை அப்டேட்
வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு |ஒடிசா கடற்கரை பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவி வருகிறது, இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு





















