புரட்டாசி 2வது சனிக்கிழமை; தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கரூரில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்திற்கு கரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ சாரதா மகளிர் அறிவியல் கல்லூரியில் நவராத்திரி பூஜை.
கோடங்கிபட்டி ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மைகளை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
கரூர் கோடங்கிபட்டி ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் நவராத்திரியை முன்னிட்டு கல்லூரி பிரேயர் காலில் நவராத்திரி கொலு பொம்மைகள் மற்றும் அதன் வரலாறு, அதன் தொடர்ச்சியாக பல்வேறு சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாவை நாள்தோறும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காந்திகிராமம் விஜயலட்சுமி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் நவராத்திரி கொலு பொம்மைகளை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து, கல்லூரியில் பேராசிரியர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையுடன் குங்கும அர்ச்சனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பள்ளியின் செயலர் நீலகண்ட பிரியா அம்பா அவர்கள் சுவாமிகளுக்கு மகா தீபாவனை காட்டினார். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.