இயக்குநராக அறிமுகமாகும் பார்த்திபனின் மகன்..முதல் படத்திலேயே தந்தை இயக்குகிறாரா!
தனது மகன் ராக்கி பார்த்திபனின் மகன் கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்

இயக்குநராக அறிமுகமாகும் பார்த்திபனின் மகன்
தனித்துவமான இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் மகன் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தனது மகன் ராக்கி பார்த்திபன் கூடிய விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பதையும் அவரது படத்தில் தனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
"ராக்கி பார்த்திபன் ! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!" என தனது எக்ஸ் தளத்தில் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்
ராக்கி பார்த்திபன் !
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 14, 2025
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார்… pic.twitter.com/GMUEcMEEAb





















