ரிவியுவருக்கு 25 ஆயிரம் கொடுத்த தனுஷ்...புட்டு புட்டு வைத்த பிரபல யூடியுபர்
படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்க யூடியூப் விமர்சகர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான சர்ச்சையில் நடிகர் தனுஷ் பேர் எடுபட்டுள்ளது

காசு கொடுத்து ரிவியு போட சொன்ன தனுஷ் ?
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி பரவலாக பேசுபொருளாகியுள்ளது. திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்யும் யூடியுப் விமர்சகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பாக அல்லது படத்தின் நடிகர்கள் சார்பாக பணம் கொடுக்கப்படுவதாக இந்த நிகழ்ச்சியில் சிலர் வெளிப்படையாக பேசினார்கள். அந்த வகையில் பிரபல ரிவியூவர் ஒருவர் பிரபல நடிகர் ஒருவர் சார்பாக அவர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்க 25 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
யார் இந்த பிரபல நடிகர் என பலர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் பெயர் இதில் சிக்கியுள்ளது. அந்த விமர்சகர் வெளியிட்ட வீடியோவில் " கடந்த ஆண்டு ஒரு பிரபல நடிகர் இயக்கி அவரே நடித்த ஒரு படம் வெளியானது. அண்ணன் தஙக் செண்டிமெண்ட் இந்த படத்தின் கதை. படம் நன்றாக இல்லாமல் பெரும்பாலான விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். " என கூறியுள்ளார்.
So the movie is #Raayan .
— Veguli (@veguli_) June 15, 2025
And the actor's side PR is DHANUSH.. !!
Bro offered 25K to give positive review. 😳
I wondered many times why VALAIPECHU never spoke bad about Dhanush & during nayanthara issue within a hour video from VP team arrived.
But bro in Audio launches… pic.twitter.com/1lJU3XIBzo
பணம் கொடுத்து ஓட்டிய படமா ராயன்
தனுஷின் 50 ஆவது படமாக ராயன் படம் உருவானது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து தனுஷ் இயக்கி இப்படத்தில் நடித்திருந்தார். துஷாரா விஜயன் , சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் , பிரகாஷ் ராஜ் , செல்வராகவன் , சரவணன் , வரலட்சுமி சரத்குமார் , அபர்னா பாலமுரளி என இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ராயன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் ரூ 160 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ராயன் படத்தின் மீது பிரபல யூடியூபர் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.





















