மேலும் அறிய

பள்ளிக்கு வர மறுத்த மாணவர்கள்.. வீட்டிற்கே தேடிச் சென்ற கலெக்டர் - விருதுநகர் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

விருதுநகரில் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திய மாணவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மீண்டும் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பு வகித்து வருகிறார். தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல் விகிதத்தை குறைக்கும் விதமாக பல்வேறு பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களை வீடு தேடிச் சென்று பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தி வருகிறார்.

இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லாத மாணவர்களை நேரில் சந்தித்து பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் ஒருவரது வீட்டிற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அந்த மாணவனிடம், 

வீடு தேடிச் சென்ற கலெக்டர்:

 உனக்கு வேற ஏதாவது டிரெஸ் வேண்டுமா? புக் வேண்டுமா? பேக் வேண்டுமா? என்ன வேணுமோ கேளு. ஐடிஐ-யில் சேர்த்து விடுவாங்க. ஒரு வருஷ கோர்ஸ் மட்டும் படி. படிச்சு முடிச்ச உடனே வேலைக்கு போகலாம். இப்படியே இருந்தா ஒன்னும் இல்லாமதான் போகனும். கூலி வேலைக்குத்தான் போகனும். புரியுதா மிஸ் பண்ணிடாத இந்த வாய்ப்பை.

உனக்கு ஸ்கூல் புடிச்சா அந்த ஸ்கூல்ல படி. இல்லாட்டி வேற ஸ்கூல்ல படி. அந்த ஸ்கூல்ல சேத்து விட்றேன். ஸ்கூல் வேண்டாம்னா ஐடிஐ போ. ரெண்டுல ஒன்னு போகனும். ஒரு வருஷம் படிச்சா நல்ல வேலைக்கு போவல. 

வேலை வாங்கித் தர்றேன் படி:

விருதுநகர் ஐடிஐ இருக்குதுல. தெரியுமா? சூலக்கரையில. அங்க போனனா உனக்கு ஏதாவது தொழிற்கல்வி சொல்லித் தருவாங்க. ஒரு வருஷம் படிச்சா நல்ல வேலைக்கு போயிடலாம். உனக்கு வேலையும் வாங்கித் தர சொல்றேன். இல்லனா ஃபயர் சர்வீஸ்னு ஒரு கோர்ஸ் இருக்குது. அது படிச்சா நம்மூர்ல பட்டாசு ஃபேக்டரிக்கு வேலைக்கு போயிடலாம். நல்ல சம்பளம் கிடைக்கும். அது படிக்குறது இல்ல. வேலை பழகுறதுதான். 

இப்போ உன்னை அப்பா அம்மா பாத்துக்குவாங்க. அதுக்கு அப்புறம் யாரு பாத்துக்குவா? நீதானே அவங்களை பாத்துக்கனும். வேலைக்கு போகாம காசு எப்படி வரும்.

இவ்வாறு அவர் அந்த மாணவருக்கு அறிவுரை கூறினார்.

மேலும், அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மாணவனை அறிவுரை கூறி படிக்க அனுப்புமாறு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் மாணவரை தட்டிக்கொடுத்து அறிவுரை வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தமிழக அரசு வழங்கும் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்.
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
தஞ்சாவூர் பழைய நீதிமன்ற கட்டிடம்... இனி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்விக்கோட்டையாக மாற்றம்
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS இடங்கள் 200 ஆக உயர்வு! மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி குட் நியூஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Embed widget