Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - எவ்வளவு வசூல் கிடைத்தது..?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது.
![Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - எவ்வளவு வசூல் கிடைத்தது..? Palani Murugan Temple got a revenue of Rs.2 Crore 69 Lakh 29 Thousand 944 through bill offering TNN Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - எவ்வளவு வசூல் கிடைத்தது..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/0572345c6dd356d5df5c29efb0c85cf31693029034695739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளிப்பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக நிர்வாகம் சார்பில் கோவில் பகுதியில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் யாவும் நிரம்பியவுடன், அவை திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளிப்பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. அதன்படி, பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதனையடுத்து கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 69 லட்சத்து 29 ஆயிரத்து 944 வருவாய் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 826 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கத்திலான பொருட்கள் 925 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 கிலோ 162 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)