(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
கரூர் உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள்பாளித்து வரும் ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,நெய், தேன், எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,நெய், தேன், எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அனுவித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் உழவர் சந்தை ஆன்மீக ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.