தக் லைஃப் பட பாடகி பிறந்தநாள் பார்ட்டியில் சிக்கிய கஞ்சா...இதுவரை 9 பேர் கைது
தெலுங்கு திரையுலகின் பிரபல பாடகியான மங்லியின் பிறந்த நாள் பார்ட்டியில் கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுக்களை ஹைதராபாத் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது

யார் இந்த மங்லி ?
தெலுங்கு திரையுலகின் முன்னணி பாடகி மங்லி. இவரது நாட்டுப்புற பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இவர் சொந்தமாக நடத்தும் யூடியுப் சேனலுக்கு 3.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளார்கள். இவரது இயற்பெயர் சத்யவதி ராதோட். தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற 'ஜிங்குச்சா' பாடலை தெலுங்கில் பாடியுள்ளார்.
பிறந்தநாள் பார்ட்டியில் சிக்கிய கஞ்சா
கடந்த ஜூன் 10 ஆம் தேதி மங்லி தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். செவெல்லாவை அடுத்துள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் பிறந்த நாள் பார்ட்டியை ஒருங்கிணைத்து கொண்டாடினார் மங்லி . இந்த பிறந்த நாளில் மங்கியின் நெருங்கிய நண்பர்கள் உட்பட 45 பேர் கலந்துகொண்டார். இந்த மாதிரியான பொது நிகழ்வில் மது அருந்துவதற்கும் ஸ்பீக்கர்களை பயண்படுத்துவதற்கும் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்றும் அனுமதி வாங்காத காரணத்தினால் செவெல்லா காவல்துறையினர் நட்சத்திர விடுதியில் சோதனை நடத்தினார்கள். அப்போது சோதனையில் கஞ்சா மற்றும் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகளை காவல்துறை கண்டுபிடித்துள்ளார்கள். இவற்ரை பறிமுதல் செய்ததோடு 9 பேரையும் கைது செய்துள்ளது போலீஸ்
மங்லி விளக்கம்
இதனைத் தொடர்ந்து தற்போது பாடகி மங்லி தன் சார்பில் விளக்கமளித்துள்ளார் . பார்ட்டியில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் மது விநியோகம் செய்யவும் முறையாக அனுமதி வழங்க வேண்டும் என்பது தனக்கு தெரியாது என்றும் மது தவிர எந்த வித போதை பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மங்லி தெரிவித்துள்ளார். பார்ட்டியில் கலந்துகொண்ட ஒருவர் மட்டுமே சில நாட்கள் முன்பாக கஞ்சா அடித்தித்துள்ளதை காவல்துறையிடம் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்றபடி இது தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு நிகழ்வு என அவர் கூறியுள்ளார். தற்போது தான் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
బర్త్ డే పార్టీ కేసుపై స్పందించిన మంగ్లీ
— srinadh sharma (@srinadh_sharma) June 12, 2025
నా తల్లిదండ్రుల కోరిక మేరకు ఫ్రెండ్స్ పార్టీ చేసాం
లిక్కర్, సౌండ్కు పర్మిషన్ అవసరమన్న విషయం తెలియదు
గంజాయి ఎవరూ తీసుకోలేదు, ఎవరికైనా అయితే అది మా పార్టీలో కాదు
ఆధారాలు లేని ఆరోపణలు చేయకండి – మంగ్లీ#Mangli #news #drugs pic.twitter.com/oEIXqztEEP





















