விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் திருமலை...எந்தெந்த திரையரங்குகளில் தெரியுமா?
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள திருமலை திரைப்படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

விஜய் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய் வரும் ஜூன் 22 ஆம் தேதி 51 ஆவது பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். கடந்த மே மாதம் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்த விஜய் முழு நேர அரசியல் பணிகளில் இறங்கியுள்ளார். விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் விஜய் நடித்துள்ள திருமலை படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.
திருமலை ரீரிலீஸ்
முன்னதாக விஜய் நடித்த கில்லி , சச்சின் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றன. தற்போது சென்னை கமலா திரையரங்கில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருமலை திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குநர் ரமணா இயக்கத்தில் விஜய் , ஜோதிகா மறைந்த நடிகர் விவேக் மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான படம் திருமலை. வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜயின் கரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று திருமலை. 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அன்றைய சூழலில் ரூ 39 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கில்லி , சச்சின் படங்களைப் போலவே திருமலை படமும் ரீரிலீஸில் படம் பெரியளவில் வசூல் சேர்க்கும் என எதிர்பார்க்கலாம்
ஜனநாயகன்
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்லது. பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , கெளதம் மேனன் , பிரியாமணி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜன நாயகன் விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும். இந்த படத்தைத் தொடர்ந்து நடிப்பை கைவிட்டு முழு அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய். இந்த படம் விஜய்க்கு ஒரு சிறப்பான ஃபேர்வெல் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது.





















