ஆன்மீகம்: கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா சண்டியாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் மகா சண்டியாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் மகா சண்டியாக நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலயம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 15 நாட்கள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு மகா சண்டியாகம் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்றது. முதல் நாள் மகா சண்டியாக நிகழ்ச்சி தற்போது தொடங்கி தொடர்ந்து இரண்டு நாட்கள் மகா சண்டி யாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.
வைகாசி பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்செரிதல் விழா இன்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற உள்ளதால் ஆலயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்