மேலும் அறிய
8வது முறையாக பலோன் டி’ஓர் விருதை வென்று சாதனை படைத்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி’ஓரை 8வது முறையாக வென்றுள்ளார் லியோனல் மெஸ்ஸி.

Lionel Messi
1/6

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. உலகக்கோப்பையில் தான் ஆடிய போட்டிகளில் மொத்தம் 7 கோல்களை பதிவு செய்துள்ளார்.
2/6

அதுமட்டும் இல்லாமல் நான்கு முறை ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/6

சர்வதேச போட்டிகளில் மட்டும் அதிரடி காட்டாமல் கிளப் ஆட்டங்களிலும் அதிரடி காட்டிவரும் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் தொடங்கி பிஎஸ்ஜி இன்டெர் மியாமி கிளப்பில் விளையாடி வருகிறார்.
4/6

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி’ஓர் விருதை மெஸ்ஸி 8 முறை வென்றுள்ளார்.
5/6

விருது பரிந்துரை பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாபே,மெஸ்ஸி மற்றும் ஹாலண்ட் இவர்கள் மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
6/6

பலோன் டி’ஓர் விருதை அதிகமுறை வெல்லும் முதல் வீரர் என்றபெருமைக்கு சொந்தக்காரராகிறார் மெஸ்ஸி. அதுமட்டுமில்லாமல் அதிகமுறை பலோன் டி’ஓர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் உரியவராகிறார்.
Published at : 03 Nov 2023 03:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement