மேலும் அறிய
Whole Moong Dal Curry : சாதம், சப்பாத்திக்கு அசத்தலான சத்துகள் நிறைந்த சைட் டிஷ்..பச்சைப்பயறு கறி ரெசிபி!
Moong Dal Curry : சாதத்திற்கும் டின்னர் சப்பாத்திக்கும் ஒரே சைட் டிஷ் செய்யனுமா..? கவலையே வேண்டாம்..இந்த சத்துக்கள் நிறைந்த சுவையான பச்சைப்பயறு கறியை செய்து அசத்துங்கள்.

பச்சைப்பயறு கறி
1/6

தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு - 1/2 கப், தண்ணீர், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 1/2 தேக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி இடித்தது, தக்காளி - 3 பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது
2/6

செய்முறை: பச்சைப்பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த பச்சைப்பயிரை பிரஷர் குக்கரில் போட்டு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3/6

பிறகு ஒரு கடாயில், நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் சீரகம், பெருங்காயதூள் சேர்த்து கிளறவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4/6

பின்பு இடித்த இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கிளறி பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
5/6

அடுத்து வேகவைத்த பச்சைப்பயிரை கடாய்க்கு மாற்றி தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து சுமார் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
6/6

இறுதியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து விடவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான பச்சைப்பயறு கறியை மேலே ஒரு துளி நெய்யுடன் சூடாகப் பரிமாறவும்!
Published at : 11 Mar 2024 06:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion