மேலும் அறிய
Palakkeerai Pakkoda : சத்தான பாலக்கீரை பக்கோடா.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
Palakkeerai Pakkoda Recipe : சத்தான சுவையான பாலக்கீரை பக்கோடாவை குழந்தைகள் சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

கீரை பக்கோடா
1/6

தேவையான பொருட்கள் : பாலக்கீரை - 1 கட்டு, வெங்காயம் - 2 நறுக்கியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது , பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, ஓமம் - 1 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டிம், பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , அரிசி மாவு - 1/4 கப் , கடலை மாவு - 1 கப், சூடான எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, தண்ணீர், எண்ணெய்
2/6

செய்முறை : பாலக்கீரையை தண்ணீரில் கழுவி எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3/6

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் நறுக்கி கொள்ளவும். அதனோடு ஓமம், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காய தூள், அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
4/6

இந்த கலவையில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பக்கோடா கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5/6

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பக்கோடாவை மாவை சின்ன சின்னதாக உருட்டி எண்ணெயில் போடவும்.
6/6

பக்கோடா பொன்னிறமாக வரும் வரை நன்கு வறுக்கவும். வறுத்த பக்கோடாவை ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான பாலக்கீரை பக்கோடா தயார்
Published at : 05 Jun 2024 11:10 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement