கிரியேட்டிவிட்டிய காட்ட இதான் நேரமா...தினுசு தினுசாக மாநாட்டிற்கு வந்த தவெக தொண்டர்கள்
குழந்தைகள் ஓட்டும் சைக்கிள் , ரோலர் ஸ்கேட்ஸ் என வித்தியாசமான முறையில் தொண்டர்கள்தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள்

தவெக மதுரை மாநாடு
கடந்த ஆண்டு கட்சியை அறிவித்து தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பல லட்சம் தவெக தொண்டர்கள் மத்தியில் வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார் விஜய் . அதைத் தொடர்ந்து இன்று மதுரையில் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. மதுரை அருகே பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் மாநாட்டிற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்ற முறை மாநாட்டில் தொண்டர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களை தவிர்க்க இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். மாநாட்டு திடலை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.100க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சம் தொண்டர்கள் மாநாட்டிற்கு வந்திருப்பதாக செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வெயிலியின் தாக்கம் அதிகம் இருப்பதால் தொண்டர்கள் கடும் வெயிலில் மைதானத்தில் விரிக்கப்பட்ட தார்பாய்களை கொண்டு பந்தல் அமைத்துள்ளார்கள்.
தினுசு தினுசாக வரும் தொண்டர்கள்
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டகர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மதுரைக்கு பயனித்துள்ளார்கள். இதில் ஒரு சிலர் தனித்துவமான முறையில் மாநாட்டிற்கு வருகை தந்து கவனமீர்த்துள்ளார்கள். திருச்சியில் இருந்து ஒருவர் குழந்தைகள் ஓட்டும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு மாநாட்டிற்கு வந்துள்ளார். விஜய் சொன்ன பேச்சைக் கேட்டு சைக்கிளில் ஹெல்ட்மட் அணிந்து வந்துள்ளார். மற்றொரு மாணவி ஒருத்தர் ரோலர் ஸ்கேட்ஸில் மாநாட்டிற்கு வருகை தந்துள்ளார். சென்ற மாநாட்டிற்கு இவர் இதே போல் வந்திருந்ததாகவும் இந்த முறை விஜய் தன்னை மேடையில் அழைத்து பேச வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநாட்டிற்கு சின்ன குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் கோரிக்கை வைத்தப் பின்னும் சுற்றுலா செல்வது போல் மக்கள் கைகுழந்தையை தூக்கிக் கொண்டு குடும்பத்துடன் மாநாட்டிற்கு வந்துள்ளார்கள்.
'அம்மா என்ன கோயிலுக்கு போக சொனனர். ஆனால் நான் இங்கு என் கடவுளை பார்க்க வந்திருக்கிறேன்" என பதாகைகளை ஏந்தியபடி பெண் தொண்டர்கள் வந்துள்ளார்கள்.





















