உடைந்த கையோடு வந்த ஷாருக் கான்..தேசிய விருது சர்ச்சைக்கு வித்தியாசமான முறையில் பதில்
Shah Rukh Khan : தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து வெளியான விமர்சனங்களுக்கு நடிகர் ஷாருக் கான் பதிலளித்துள்ளார்

2023 ஆம் வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன். சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக் கான் மற்றும் 10th ஃபெயில் படத்திற்காக விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. ஷாருக் கானுக்கு இந்த விருது வழங்கியது பெரும் விவாதப் பொருளானது. இத்தனை ஆண்டுகள் பாலிவுட் திரையுலகின் அடையாளமாகவும் உச்ச நட்சத்திரமாக திகழும் ஷாருக் கானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது நியாயமானது தான் என ஒரு தரப்பினர் வாதிட்டனர். இன்னொரு பக்கம் பல தேர்ந்த நடிகர்கள் இருந்தும் ஷாருக் கான் போன்ற வெகுஜன ஸ்டார் ஒருவருக்கு இந்த விருது வழங்கிய விருது குழுவின் முடிவை கேள்வி கேட்டனர். நடிகர் ஊர்வசி இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தது பெரியளவில் கவனமீர்த்தது. தேசிய விருது வென்றது குறித்து ஷாருக் கான் முதல் முறையாக மேடையில் பேசியுள்ளார்
தேசிய விருது சர்ச்சை
தனது மகன் ஆர்யான் கான் இயக்கியிருக்கும் புதிய நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சியின் பத்திர்கையாளர் சந்திப்பிற்கு வந்த ஷாருக் கான் இது குறித்து பேசியுள்ளார். ஒரு கையில் கட்டுப்போட்டு வந்த ஷாருக் கான் தனக்கு அடிப்பட்டதால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்திருப்பதாக கூறினார். கொஞ்சம் பெரிய காயம் என்பதால் குணமாக ஒரு சில மாதங்கள் ஆகும் என்று அவர் கூறினார். ஆனால் தேசிய விருதை கையில் ஏந்த தனக்கு ஒரு கையே போதும் என அவர் உற்சாகமாக பேசினார்.
#WATCH | Mumbai: Superstar Shah Rukh Khan said, ”…National Award uthane ke liye mera ek haath ki kaafi hai…”
— ANI (@ANI) August 20, 2025
He says, “Before you people ask, I myself will tell what happened to my hand. I got hurt and had a small surgery. It was not small, actually, it was a little major. It… pic.twitter.com/zV3kx0F3IF
தன் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இயல்பாக கடந்து செல்லக் கூடிய ஷாருக் கான் விருது குறித்து தனமேல் வைக்கப்பட்ட விமர்சனங்களையும் பெரிதுபடுத்தவில்லை.





















