காட்டுமொக்க டா டேய்...ஓடிடியில் வெளியான பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு..வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
பவன் கல்யாண் நடித்து தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான ஹரிஹர வீர மல்லு படம் ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து படத்தை ரசிகர்கள் கடுமயாக ட்ரோல் செய்து வருகிறார்கள்

ஓடிடியில் வெளியான ஹரிஹர வீர மல்லு
பவன் கல்யாண் நடித்து ரூ 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஹரிஹர வீர மல்லு. பெரும் கால தாமதத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. 17 ஆம் நூற்றாண்டில் முகலாய ஆட்சிகாலத்தில் வாழ்ந்த ஒரு நாயகனை மையமாக வைத்து இப்படம் உருவானது. வெளியான முதல் நாள் தொடங்கி படத்திற்கு எல்லா தரப்பினரும் நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கினர். படுமோசமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், இஸ்லாமிய எதிர்ப்பு வாத கருத்துக்களை இப்படம் வலியுறுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹரிஹர வீர மல்லு படத்தை கடுமையாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
#HariHaraVeeraMallu 😂😂😂pic.twitter.com/PiGRBhIUzQ
— Tamil Movies (@KollywoodByte) August 21, 2025
HHVM in a Nutshell 🤣😂😭
— Akhil AAce👒 (@Tomcruise9995) August 20, 2025
Saving your - 2hrs 33mins#HariHaraVeeraMallu pic.twitter.com/AtqUQZ8OCT
கிரிஷ் ஜகர்லாமுடி , ஏ.எம் ஜோதி கிருஷ்ணா இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாபி தியோல் , நிதி அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.





















